Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்ணன், கந்தன் ஒற்றுமைகள்! முறுக்கு மீசையுடன் அருளும் கிருஷ்ணன்! முறுக்கு மீசையுடன் அருளும் ...
முதல் பக்கம் » கிருஷ்ண ஜெயந்தி - 2016
காரிய ஸித்தி தரும் மதனகோபால மந்திரம்!
எழுத்தின் அளவு:
காரிய ஸித்தி தரும் மதனகோபால மந்திரம்!

பதிவு செய்த நாள்

24 ஆக
2016
05:08

மனிதராகப் பிறந்தவர்களுக்கு எத்தனையோ விருப்பங்கள் இருப்பது இயல்புதான். அதேபோல் எண்ணற்ற பிரச்னைகள் இருப்பதும் இயல்புதான். மனிதர்களின் பலதரப்பட்ட விருப்பங்கள் நிறைவேறியும், பிரச்னைகள் நீங்கவும் நாரத மகரிஷியால் உபதேசிக்கப்பெற்ற மந்திரம்தான் மதனகோபால மந்திரம். பிரம்மாவின் மானச புத்திரரான நாரத மகரிஷி சகலலோக  சஞ்சாரி. எப்போதும் நாராயண நாமத்தை சங்கீர்த்தனம் செய்து கொண்டிருப்பவர். இந்த உலகத்தில் உள்ள மனிதர்களின் சகல விருப்பங்களும் நிறைவேறி, அவர்கள் சந்தோஷமாக வாழவேண்டும் என்பதற்காக அவர் அருளிய மதனகோபால மந்திரம் ஆறு மந்திரங்களைக் கொண்டது.

மந்த்ரவாத திலகம் என்ற புத்தகத்தில் இந்த மந்திரங்களின் சிறப்பு சொல்லப்பட்டு இருக்கிறது.

இந்த மந்த்ரங்களில் முதல் மந்திரமாக இருப்பது.

ஓம் கோபீஜன வல்லபாயை ஸ்வாஹா என்ற ஒப்பற்ற மந்திரமாகும்.

இந்த ஒரு மந்திரத்தையே பல வகைகளில் பிரயோகம் செய்து, பல வகையான காரியங்களில் ஸித்தி பெறலாம்.

இந்த மந்திரத்தின் ரிஷி: நாரதர்; சந்தஸ்: விராட், தேவதை: கிருஷ்ணர்

இந்த மந்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்று, அங்கநியாச கரநியாச பூர்வாங்க பூஜைகள் செய்து, ஒவ்வொரு காரியத்துக்கும் குறிப்பிட்ட முறைப்படி ஹோமம் செய்து ஜபிக்கவேண்டும்.

பகவான் கிருஷ்ணரை பிருந்தாவனத்தில் இருக்கும் கல்பக விருட்சத்தின் கீழ், ரத்தினங்களால் இழைக்கப்பட்ட பீடத்தில் எட்டு இதழ்கள் கொண்ட தாமரை மலரில் அமர்ந்திருப்பவராகவும், மஞ்சள் பட்டு உடுத்தியவராகவும், மேகநிறம் உள்ளவராகவும், அநேக ஆபரணங்களை அணிந்திருப்பவராகவும், கோபிகைகளாலும் பசுக்களாலும் சூழப்பட்டிருப்பவராகவும், முனிவர்களால் துதிக்கப்பெறுபவராகவும், புல்லாங்குழல் வாசிப்பவராகவும் தியானித்து, முன் சொன்ன மந்திரத்தை ஒரு லட்சம் ஜபம் செய்து தாமரைப் பூக்களால் ஹோமம் செய்தால் மந்திர ஸித்தி ஏற்பட்டு சகல காரியங்களிலும் வெற்றி உண்டாகும். இதேபோல் சீந்தில் கொடியை ஆஹுதி செய்து ஹோமம் செய்தால் சகல பிணிகளும் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும்.

இதே மந்திரத்தை வேப்பெண்ணெயில் தானி சமித்தை முக்கி 10,000 முறை ஹோமம் செய்தால் எதிரிகளை வெற்றி கொள்ளலாம். இதேபோல் இந்த மந்திரத்தை சாதகம் செய்யும் நபர் தன்னை கிருஷ்ணராக பாவித்து கிருஷ்ணர் கம்சனை வதம் செய்யும் ரூபத்தை தியானித்து, 10,000 முறை ஜபித்து, எதிரியின் நட்சத்திரத்துக்கு உரிய சமித்தை எடுத்து 10,000 முறை ஹோமம் செய்தாலும் எதிரிகளை வெற்றி கொள்ள முடியும்.

ஒருவர் கம்பீரமான வித்வானாக மற்றவர்களால் போற்றப்பட வேண்டுமானால், இந்த மந்திரத்தை 10,000 முறை ஜபித்து பலாச சமித்தால் ஹோமம் செய்தால், சகல சாஸ்திரங்களிலும் மிகச் சிறந்த வித்வானாகத் திகழ முடியும்.

வெள்ளைப் பூக்கள், பச்சரிசியுடன் நெய் சேர்த்து 7 நாட்கள் இந்த மந்திரத்தை ஜபித்து ஹோமம் செய்து, ஹோம குண்டத்தில் இருந்து பஸ்பம் எடுத்து தலையிலும் நெற்றியிலும் தரித்துக் கொண்டால், விரும்பிய அனைத்தையும் தன்வசப்படுத்தலாம். இதையே பெண்கள் செய்தால் அவர்கள் விரும்பியவரையே வாழ்க்கைத் துணைவராக அடையலாம்.

கோபிகா ஸ்த்ரீகளுக்கு இடையில் கிருஷ்ணர் இருப்பதாக தியானித்து, நாயுருவி சமித்தால் ஹோமம் செய்தால், பலரும் மதித்துப் போற்றும் தலைமைப் பதவியில் அமரலாம். வில்வ இலை, வில்வக்காய், வில்வ சமித்து போன்றவற்றை சர்க்கரையுடன் சேர்த்து தாமரைப் பூக்களுடன் ஹோமம் செய்தால் ஜாதகர் கோடீஸ்வரராகத் திகழ்வார். மேலே சொல்லப்பட்ட அனைத்து நலன்களையும் ஒருவர் அடைந்து மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால், திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரத்தைப் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்யலாம்.

குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா எனும் நாமம்.

 
மேலும் கிருஷ்ண ஜெயந்தி - 2016 »
temple news
கிருஷ்ண ஜெயந்தியன்று நம் வீட்டைத் தூய்மைப்படுத்தி, வாசல்படியில் இருந்து பூஜை அறை வரை கண்ணனின் ... மேலும்
 
temple news
கிருஷ்ணஜெயந்தியன்று தென்னிந்தியாவில் கண்ணனை வாசலில் இருந்து வரவேற்கும் விதமாக கோலமிடுவது வழக்கம். ... மேலும்
 
temple news
கிருஷ்ணஜெயந்தியன்று காலை லட்சுமியின் அம்சமான பசுவுக்கு உணவளிக்க வேண்டும். பூஜை அறையில் கண்ணன் படம் ... மேலும்
 
temple news
கிருஷ்ணரின் தந்தை வசுதேவர், தன் குழந்தையைக் கம்சனிடம் இருந்து காப்பாற்றும் வகையில், ஆயர்பாடியில் உள்ள ... மேலும்
 
temple news
கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் கோபிகைகளுடன் இருந்ததையும், மாயச்செயல் புரிந்து எதிரிகளை ஜெயித்ததையும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar