Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, ... சதுரகிரியில் பிரதோஷம், பவுர்ணமி வழிபாடு; மழையை பொறுத்தே பக்தர்களுக்கு அனுமதி சதுரகிரியில் பிரதோஷம், பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி ஆண்டவர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு; பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடபழனி ஆண்டவர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

18 மே
2024
10:05

சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நேற்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. இன்று இரவு யானை வாகன புறப்பாடு நடக்கிறது.

வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, 10 நாள் பிரம்மோற்ச வம் கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று இரவு மங்கள கிரி விமானத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா நடந்தது. விழாவின் இரண்டாம் நாள் சூரிய, சந்திர பிரபை புறப்பாடும், மூன்றாம் நாள் இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி தெய் வானை சமேத சுப்பிர மணியர் வீதி உலாவும் நடந்தது. விழாவின் நான்காம் நாளில் காலை, மங்களகிரி விமான புறப் பாடு நடந்தது. இரவு நாக வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். ஐந்தாம் நாள் விழாவில், நேற்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. இன்று இரவு யானை வாகன புறப்பாடு நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் பிரதான நாளான, 19ம் தேதி காலை தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 7:00 மணி முதல் 8:00 மணிக் குள், பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. இரவு ஒய்யாளி உற்சவம் நடக்கிறது.


குதிரை வாகன புறப் பாடு, 20ம் தேதி நடக் கிறது. 21ம் தேதி இரவு 7:00 மணிக்கு, வடபழனி ஆண்டவர் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைகாசி விசாகமான, 22ம் தேதி காலை 9:00 மணிக்கு வள்ளி, தேவ சேனா சமேத சண்முகர் விதி உலா நடக்கிறது. காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவ மும், கலசாபிஷேகமும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மயில் வாகனத்தில் புறப் பாடு நடக்கிறது. பின். சுப்பிரமணியர் வீதி உலாவை அடுத்து, கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar