Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புவனகிரியில் ராகவேந்திரர் ஆராதனை ... எல்லா இன்பங்களையும் அருள்வாயா கண்ணா! எல்லா இன்பங்களையும் அருள்வாயா கண்ணா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழுமலையான் கோவிலில் டாலர் விற்பனை மையம்!
எழுத்தின் அளவு:
ஏழுமலையான் கோவிலில் டாலர் விற்பனை மையம்!

பதிவு செய்த நாள்

25 ஆக
2016
11:08

திருப்பதி; திருமலை ஏழுமலையான் கோவில் எதிரே, டாலர் விற்பனை மையத்தை, தேவஸ்தானம் அமைத்து வருகிறது. திருமலையில், லட்டு வழங்கும் மையத்தில், ஏழுமலையான் உருவம் பொறித்த தங்கம், வெள்ளி டாலர்கள் விற்கப்படுகின்றன. தற்போது, டாலர் விற்பனைக்காக, ஏழுமலையான் கோவில் எதிரேயுள்ள, புத்தக விற்பனையகம் அருகே புதிதாக மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு, செப்பு, வெள்ளி, தங்க டாலர்கள் விற்கப்பட உள்ளன. திருமலை ஏழுமலையானை தரிசிக்க, மாற்றுத்திறனாளிகளுக்கு, தேவஸ்தானம் தனிவரிசை ஏற்படுத்தி உள்ளது. தினமும் காலை, 10:00 மணி; பிற்பகல், 3:00 மணி என, இருமுறை அவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். தாங்களாகவே சென்று, ஏழுமலையானை தரிசிக்க முடியாத மாற்றுத்திறனாளிகளை, தேவஸ்தான ஊழியர்கள் அழைத்து செல்வர். தரிசனம் முடிந்ததும், அவர்களை அழைத்து வந்து கோவில் வாசலில் விடுவர். அவ்வாறு, கோவில் முன் வாசலில் கொண்டு விடப்படும் பக்தர்கள், அங்கிருந்து தாங்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கு செல்ல சிரமப்படுகின்றனர். கோவில் வாசலில் நிழற்பந்தல் இல்லாததால், வெயிலில் சிரமப்படுகின்றனர். அதனால், கோவில் வாசலில் இருந்து, பிரதான சாலை வரை செல்ல, பாட்டரி கார்களை இயக்கும்படி, தேவஸ்தானத்திற்கு, மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar