தமிழில் கம்பராமாயணம், சமஸ்கிருதத்தில் வால்மீகி ராமாயணம் போல, இந்தியில் ராம் சரித் மானஸ் (ராமனின் கதை) என்ற நூல் மிகவும் புகழ் பெற்றது. ஆஞ்சநேயரின் அம்சமான துளசிதாசர் என்பவர் எழுதிய இனிய கதை இது. இது சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. இந்தியில் இந்த நூல் வெளியான பிறகு தான், வடமாநிலங்களில் ராமபக்தி வேகமாகப் பரவியது. மிக எளிய நடையில் எழுதப்பட்ட நூல் இது. ஆஞ்சநேயர் வழிபாட்டில் மிகவும் பிரசித்தமான அனுமன் சாலீஸா இந்த நூலில் சமஸ்கிருத சேர்க்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. துளசிதாசரும் ஆஞ்சநேயரைப் போல மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.