Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளஹஸ்தி கோவிலில் கும்பாபிஷேக பணி பிள்ளையார்பட்டியில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டி விநாயகரை விட ஆலகிராம விநாயகர் மூத்தவர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2016
12:08

சென்னை: பிள்ளையார்பட்டி விநாயகரை விட, ஆலகிராம விநாயகர் மூத்தவர் என, தொல்லியல் ஆர்வலர் விழுப்புரம் வீரராகவன் தெரிவித்தார். அரும்பாக்கம், டி.ஜி.வைஷ்ணவ் கல்லுாரியில் சென்னை தின விழா கொண்டாடப்பட்டது. அதில், தொல்லியல் கண்காட்சி அரங்கை அமைத்திருந்த, விழுப்புரம் வீரராகவன் கூறியதாவது: பல ஆண்டுகளாக, விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிடைக்கும் தொல்லியல் பொருட்கள், கல்வெட்டுகளை ஆய்வு செய்து வருகிறேன். கடந்த ஆண்டின் இறுதியில், ஆலகிராமம் கல்வெட்டை கண்டுபிடித்தேன். அது, வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை வென்று, அவனது வாதாபியை எரித்த நரசிம்மவர்மன், அங்கிருந்த கற்பக விநாயகரை கொண்டு வந்து, பிள்ளையார் பட்டி குடைவரை கோவிலில் நிறுவினான். அது, கி.பி., 6ம் நுாற்றாண்டில் நிகழ்ந்தது. அதுதான், தென்னிந்தியாவின் முதல் விநாயகர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறினர்.

ஆனால், திண்டிவனத்திற்கு அருகில் ஆலகிராமத்தில் உள்ள விநாயகர், கி.பி., 4 - 5ம் நுாற்றாண்டை சேர்ந்தவர் என்பதை, ஆலகிராமம் கல்வெட்டில் உள்ள, வட்டெழுத்து உணர்த்துகின்றன. அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் என்ற கிராமத்தில், முதலாம் நரசிம்மன் காலத்திய, எழுத்தில் பொறிக்கப்பட்ட சிலம்ப வீரனின் நடுகல்லை கண்டுபிடித்தேன். அது தான், தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரே சிலம்ப வீரனுக்கான நடுகல்லாகும். கடந்த, 1992ல், முகையூர் கோழி, மேலச்சேரிக்கு ஆடிய கோழிக்கான நடுகல்லை கண்டுபிடித்தேன். எழுத்துப்பொறிக்கப்பட்ட 15க்கும் மேற்பட்ட அய்யனார், கொற்றவை, முருகன், விநாயகர், மூத்ததேவி சிற்பங்களை, பொதுமக்களின் ஆதரவோடு கண்டுபிடித்துள்ளேன். விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு, வரலாறு, தொல் பொருட்கள் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar