திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 10 நாட்கள் விழா நடக்கும். இன்று மாலை, பூர்வாங்க பூஜை துவங்கும். நாளை காலை, கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நடக்கும். இரவில், மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதி உலா வருவார். தினமும் இரவு, உற்சவர் உலா நடக்கும்.