கடலுார்: உடலப்பட்டு முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 4ம் தேதி நடக்கிறது. கடலுார் அடுத்த உடலப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள செல்வகணபதி, முத்துமாரியம்மன், பாலமுருகன், பூரணி பொற்கலை, மதுரைவாழி ஐய்யனாரப்பன், பொறையாத்தம்மன் மற்றும் நாகதேவதை கோவில் திருப்பணி செய்து வரும் 4ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதனையொட்டி வரும் 3ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. அன்று மாலை முதல்கால யாகசாலை பூஜை நடக்கிறது. 4ம் தேதி காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி செல்வகணபதி, முத்துமாரியம்மன் உள்ளிட்ட கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபி÷ ஷகம் மற்றும் தீபாராதனையும், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.