புதுச்சேரி: கொட்டுப்பாளையம் கிருஷ்ணா மந்திர் ஹரே கிருஷ்ணா கோவிலில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி நடந்தது. லாஸ்பேட்டை கொட்டுப் பாளையத்தில் கிருஷ்ணா மந்திர், ஹரே கிருஷ்ணா கோவில் உள்ளது. இங்கு, கிருஷ்ணர் அவதரித்த தினமான நேற்று கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா நடந்தது. இதனையொட்டி, மாலை 5.30 மணிக்கு ஹரிநாம பஜனை, 6.15 மணிக்கு துளசி பூஜை, இரவு 7.00 மணிக்கு கவுர ஆரத்தி கீர்த்தனைகள் நடந்தது. தொடர்ந்து, புதுச்சேரி கிருஷ்ணா மந்திர் தலை வர் பக்தபிரகலா தாஸ் சுவாமியின், பகவத்கீதை உபன்யாசம் நடந்தது. இரவு 10.00 மணிக்கு மகா அபிஷேகம், 12.00 மணிக்கு மகா ஆரத்தி நடந்தது. திரளான பக்தர் கள் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, நடத்தப் பட்ட கட்டுரை மற்றும் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.