கடலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள பாலத்தின் கீழ் அமைந்துள்ளது கரைகாத்த காளியம்மன் திருக்கோயில். ஒரு சமயம் இங்கு வெள்ளம் பெருக்கெடுத்து வந்தபோது, வெள்ளத்தைத் தடுத்து, மக்களைக் காத்த தெய்வம் என்று இந்த அம்மனைப் போற்றுவர். எனவே, கரை காத்த காளி அம்மன் என்றும் இந்த அம்மனை அழைக்கின்றனர். நியாயமான வழக்குகளில் வெற்றி கிடைக்க, இந்த அம்மனுக்கு விசேஷ பூஜைகள் செய்து புடைவை சாத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர்.