Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடித்தபசு; தவக்கோலத்தில் அருளும் ... மகா சங்கடஹர சதுர்த்தி;  கணபதியை வழிபட்டு கஷ்டம் நீங்க பெறுவோம்! மகா சங்கடஹர சதுர்த்தி; கணபதியை ...
முதல் பக்கம் » துளிகள்
ஆவணி அவிட்டம்; ரிக், யஜூர் உபாகர்மம்.. புனிதம் மிக்க வேத திருநாள்!
எழுத்தின் அளவு:
ஆவணி அவிட்டம்; ரிக், யஜூர் உபாகர்மம்.. புனிதம் மிக்க வேத திருநாள்!

பதிவு செய்த நாள்

09 ஆக
2025
10:08

வேதத்துக்கு உண்டான பண்டிகை என்றால் அது ஆவணி அவிட்டம் என்பர் பெரியோர். மகாவிஷ்ணு ஹயக்ரீவர் அவதாரம் எடுத்து அசுரர்கள் திருடிய வேதங்களை மீட்ட நாள் இது!நயனம் என்றால் கண். நமக்கு இரண்டு நயனங்கள் (கண்கள்) இருக்கின்றன. அவை ஊனக் கண்கள். இதுதவிர மூன்றாவதாக ஒரு கண்தேவை. அது தான் ஞானக்கண். அக்கண்ணைப் பெறுவதற்கான சடங்குதான்உபநயனம். உபநயனம் என்றால் துணைக்கண் என்று பொருள். ஞானம் என்னும் கல்வி அறிவை பெற்றால் மட்டுமே ஒருவன் கண் பெற்ற பயனைப் பெறுகிறான் என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். கடவுளைப் பற்றி அறியும்அறிவே உயர்ந்த அறிவாகும். அதனால் பூணூல் அணியும் சடங்கினை பிரம்மோபதேசம் என்று குறிப்பிடுவதுண்டு. மகாவிஷ்ணு பூலோகத்தில் பல அவதாரங்களை எடுத்து தர்மத்தை நிலைநாட்டினார். அதில் வாமன அவதாரமும் ஒன்று. அதிதி காஷ்யபரின் பிள்ளையாக அவதரித்த வாமனமூர்த்திக்கு சூரியபகவானே உபநயனம் (பூணூல்அணிவித்தல்) செய்தார். பகவானே பூணூல் அணிந்து கொண்டதன் மூலம், இச்சடங்கின் சிறப்பினை உணரமுடியும். பூணூலை யக்ஞோபவீதம் என்று அழைப்பர். இதற்கு மிகவும் புனிதமானது என்று பொருள். பூணூல் அணிபவர் களும், அதனைத் தயாரிப்பவர்களும் ஆச்சார அனுஷ்டானங்களில் இருந்து சிறிதும் விலகுதல் கூடாது. ஆவணி அவிட்டத்தன்று பூணூல் அணியும் இளைய தலைமுறையினரும் இதன் முக்கியத்துவத்தை உணர்வது அவசியம்.


விரத முறை: கணபதி பூஜையுடன் இவ்விரதத்தை துவங்கி, புண்யாவாகனம் செய்த பின், பஞ்சகவ்யம் அருந்தி உடல், மனம், இருப்பிடங்களைத் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வேளையில் கிழக்கு நுனியாக வாழை இலை போட்டு, அதில் அரிசி பரப்பி 7 கொட்டைப் பாக்குகள் வைத்து, அதில் சப்தரிஷிகளை ஆவாஹனம் செய்து, தீபாராதனை செய்து, நைவேத்தியம் படைக்க வேண்டும். பின், சப்தரிஷிகளை வேண்டி ஹோமம் செய்ய வேண்டும். அதில் அரசு அல்லது புரசு சமித்துக்கள் (குச்சிகள்), சத்துமாவு, நெய், நெல்பொரி ஆகியவற்றை மந்திரம் சொல்லி அக்னியில் இட வேண்டும். பின், புதிய பூணூல் அணிந்து கொள்ள வேண்டும்.இவ்வேளையில் பஞ்சபூதங்களையும் வழிபடலாம்.


திருமணம் ஆகாத ஆண்கள் பூணூலை குருவிற்கும், வயதில் மூத்தோருக்கும் தானமாகத் தரலாம். புதிய பூணூல் அணிந்த அனைவரும் முதலில் தேவர்களுக்கும், பின்னர் ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்கின்றனர். இவர்களில் தந்தையை இழந்தவர்கள் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்தபிறகு தங்களுடைய பிதுர்களுக்கும் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதற்கு பிறகு குருவிற்கும், வயதில் மூத்தோருக்கும் வெற்றிலை பாக்கு, பழம் மற்றும் அவர்கள் சக்திக்குத் தகுந்தாற்போல் காணிக்கைகளை அளித்து அவர்களின் ஆசிர்வாதம் பெற வேண்டும்.


பலன்: இவ்விரதம் இருந்து பூணூல் அணிந்து கொண்டவர்களை செய்பவரை எவ்வித துன்பமும் நெருங்காது. எதிரிகளின் தொல்லை குறையும்.

 
மேலும் துளிகள் »
temple news
இன்று துர்காஷ்டமி. எதிரிக்கு கூட, கருணை செய்யும் இரக்கமுள்ள தெய்வமே துர்கா. துர்கையை வழிபட ஏற்ற தினம் ... மேலும்
 
temple news
சிக்கமகளூரு மாவட்டத்தின் சிக்கமகளூரு டவுனில் இருந்து 16 கி.மீ., தொலைவில் மல்லேனஹள்ளி கிராமம் உள்ளது. ... மேலும்
 
temple news
தாவணகெரே மாவட்டம், ஜகலுார் தாலுகா கல்தேவாராபுரா கிராமத்தில் உள்ளது ஸ்ரீ கல்லேஸ்வர் கோவில். ... மேலும்
 
temple news
திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் வரும் என்று கூறுவது உண்டு. இதனால், ஆண்டிற்கு ஒரு முறை பக்தர்கள் ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் பிரபலமான மாவட்டங்களில், மைசூரு மாவட்டமும் ஒன்றாகும். வரலாற்று சிறப்பு மிக்கது. இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar