உடுமலைப்பேட்டையிலிருந்து 18 கி.மீ. தொலைவில், கொழுமம் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் மாரியம்மன் லிங்க வடிவில் காட்சி தருகிறாள். கோட்டை மாரியம்மன் என்றும் இந்த அம்மனை அழைப்பர். இரண்டரை அடி உயரத்தில் ஆவுடையாருடன் கூடிய லிங்க சொரூபியாகக் காட்சி தந்தாலும், அம்மனுக்குரிய அடையாளங்கள் ஏதும் காணப்படவில்லை. எனினும், இந்த லிங்கத்தை அம்மனாகவே பாவித்து, புடைவை அணிவித்து, பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. கண் நோய்களைத் தீர்ப்பதில் மிகச்சிறந்த வரப்ரசாதியாக திகழ்கிறாள் இந்த மாரியம்மன்.