சென்னை இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா; ஆகஸ்ட் 16ல் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2025 10:08
சென்னை; பரம கருணையின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நாளை, ஆகஸ்ட் 15 முதல் 17, 2025 வரை, இஸ்கான் சென்னை ஆனந்தமாக கொண்டாட இருக்கிறது. இது ஆண்டின் மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்றாகும். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தர்மத்தை நிலைநாட்ட பரமபொருள் பூமியில் அவதரித்த அந்த நாள், பக்தி, ஆனந்தம், மற்றும் ஒற்றுமையின் நாளாக இது செய்யப்படுகிறது.மூன்று நாட்கள் பக்தியில் மூழ்கும் விழாவாக, இசைமிகு கீர்த்தனைகள், புனித அபிஷேகங்கள், ஆரத்திகள், உபந்யாஸங்கள் மற்றும் திருவிழா கொண்டாடல்கள் நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பகவானின் அருளை வேண்டி வழிபடுவர். முக்கிய நிகழ்வுகள் ஆகஸ்ட் 16 சனிக்கிழமை நடைபெறும்.
விழாவின் முதல் நாளான ஆகஸ்ட் 15ம் தேதி மாலை 4:00 மணிக்கு அபிஷேகம் சேவை, இரவு 7:00 மணிக்கு அதிவாஸ் விழா நடக்கிறது. முக்கிய தினமான ஆகஸ்ட் 16 ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியன்று காலை மங்கள ஆரத்தியுடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து, ஸ்ரீமத் பாகவதம் வகுப்பு, தர்சன் ஆரதி மற்றும் குருப் பூஜை, கீர்த்தன் மேளா, சந்த்யா ஆரதி, மகா அபிஷேகம், மகா ஆரத்தி நடைபெற்று, அனுக்கல்ப பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. மூன்றாவது நாள் ஆகஸ்ட் 17ல் ஸ்ரீல பிரபுபாதர் வியாச பூஜையுடன் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.