சீதை பிறந்த சீதாமர்ஹியில் பிரம்மாண்ட கோயில்; அடிக்கல் நாட்டினார் அமித் ஷா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2025 02:08
பிஹார்; புனௌரா தாமில் உள்ள ஜான்கி மாதா கோயிலின் மறுசீரமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்,
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரால் சீதாமர்ஹியில் உள்ள புனௌரா தாமில் உள்ள மா ஜானகி கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இது ‘வரலாற்று சிறப்பு வாய்ந்தது என பக்தர்கள் பாராட்டியுள்ளனர்.
பிரதமர் மோடி அயோத்தியில் ராம் லல்லா கோவிலை கட்டினார். அதனை தொடர்ந்து அன்னை சீதா பிறந்த இடத்தில் பிரமாண்ட கோவில் கட்டப்பட வேண்டும் என்பது அனைவரின் நீண்ட கால ஆசையாக இருந்து வந்தது. இதனை நிறைவேற்றும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரால் சீதாமர்ஹியில் உள்ள புனௌரா தாமில் இன்று அன்னை ஜானகி கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. தியாகம் மற்றும் தவத்திற்கு பெயர் பெற்ற அன்னை சீதைக்கு, சீதை பிறந்த இடத்தில் பிரமாண்ட கோவிலை யாராவது கட்ட முடியும் என்றால் அது நரேந்திர மோடியும் பாரதிய ஜனதா கட்சியும் தான். உலகத்தின் அனைவரையும் ஈர்க்கும் ஒரு பிரமாண்டமான கோவிலாக இது இருக்கும் என அமித் ஷா கூறினார்.
இது குறித்து பீகார் பாஜக தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் கூறுகையில், பீகார் மற்றும் மிதிலா மக்கள் இந்த வரலாற்று தருணத்திற்காக காத்திருந்தனர். அந்த நாள் வந்தது. இது மிகவும் வரலாற்று தருணம், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிதிலாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் இந்த வரலாற்று தருணத்தைக் காண இங்கு கூடிவருகிறார்கள்... இந்த நிகழ்வைக் காண எங்களுக்கு வாய்ப்பளித்த முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி. இவ்வாறு கூறினார்.
சீதா மந்திர் அடிக்கல் நாட்டுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சீதாமர்ஹிக்கு வருகை தருவதற்கு முன்னதாக, இங்கு ‘அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளன. உள்துறை அமைச்சரின் பாதுகாப்புப் பணியாளர்களும் முழுமையான சோதனை நடத்தினர், மேலும் முதலமைச்சரின் பாதுகாப்புப் பணியாளர்களும் முழுமையான சோதனை நடத்தினர். பயங்கரவாத எதிர்ப்புப் படை, வெடிகுண்டு செயலிழப்புப் படை நிறுத்தப்பட்டுள்ளன. 250 இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். சிசிடிவிகள் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற்றது.