வரலட்சுமி விரதம்: ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2025 11:08
கோவை: வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கோவை, ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கோவை, ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். வரலட்சுமி விரத விழாவை முன்னிட்டு, முப்பெரும் தேவியர்களுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. துர்கை, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மன்களை வழிபட்டுச் சென்றனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.