பதிவு செய்த நாள்
08
ஆக
2025
10:08
திருமாலின் துணைவியான மகாலட்சுமி, நமக்கு பல வரங்களைத் தருபவள். வரங்கள் தருவதால் அவள் வரலட்சுமி என்னும் திருநாமம் பெறுகிறாள். செல்வத்துக்கு அதிபதியான இவளை விரும்பாதவர்களே இல்லை. பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தருபவள் அவளே. அவளே சீதையாக, ருக்மிணியாக பூமிக்கு வந்து வாழ்ந்து காட்டினாள். சீதையாக பிறந்த போது, தன் கணவருடன் காட்டிற்கு சென்றாள். கணவனே கண்கண்ட தெய்வமென அவரைப் பிரியாமல் வாழ்ந்தாள். பெண்கள் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இருக்கும் இந்த விரதத்தை முன்னிட்டு கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு உடுமலை ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சௌந்தரவல்லி தாயார் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆடி வெள்ளியை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன், வரலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழி சாலை நடுவே அமைந்துள்ள தல்லாகுளம் தர்ம முனீஸ்வரர் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடம் ஸ்ரீ வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில்வரலட்சுமி நோன்பை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், ஏமலூர் மாரியம்மன் கோவில் உட்பட மாவட்டத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது.