சென்னை, புறநகர் பகுதியான மாங்காடு தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில். இக்கோயிலில் அர்த்த மேரு சக்ர தரிசனம் மிகவும் விசேஷம். 45 திரிகோணங்களுடன் திகழும் இந்தச் சக்கரம் அஷ்ட கந்தம் எனும் எட்டு வகை மூலிகைகளால் செய்யப்பட்டது என்பதால், இதற்கு அபிஷேகம் கிடையாது; சந்தனம், புனுகு மட்டுமே சாத்தி வழிபடுகின்றனர். விஜயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது.