மண்ணில் பிறந்தவர்கள் எல்லோருக்குமே கிரகங்களால் நல்லதும் கெட்டதும் நடக்கவே செய்யும். ஸ்ரீராமருக்கு ஜென்ம ராசிக்கு குரு வந்த போது வனவாசம் ஏற்பட்டது. ஆனால், அவரது பக்தரான ஆஞ்சநேயருக்கு அவரது தவவலிமையினால் சனி பிடிக்கவில்லை என்ற செவிவழி செய்தி இ ருக்கிறது. விநாயகர் மண்ணில் பிறக்காத தெய்வம். எனவே அவரை சனி பிடிப்பதில்லை.