பதிவு செய்த நாள்
29
ஆக
2016 
12:08
 
 கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கங்கலேரி கிராமத்தில், செல்வ கணபதி, தட்சிணாமூர்த்தி, துர்கையம்மன், மகா விஷ்ணு ஆலய கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த, 27ம் தேதி காலை சுவாமி கரிகோலம், கங்கை பூஜை நடந்தது. மாலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், முதற்கால யாக பூஜை, 108 மூலிகை ஹோமம், மகா தீபாராதனை நடந்தது. இரவு 9 மணிக்கு சுவாமிக்கு அஷ்டபந்தன் மருந்து சாற்றுதல், கோபுரத்தில் கலசம் வைத்தல், கோ பூஜை, தம்பதி பூஜை, கண்யா பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 6 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, 7.30 மணிக்கு மேல் தர்மபுரி வேதகாம ஜோதிட பண்டிதர் சிவசரவண சிவாச்சாரியார், தீர்த்தமலை கார்த்திகேய சிவம், பென்னேஸ்வரமடம் மோகன்குமார் குருக்கள், பண்ணந்தூர் ஜகன்னாத பட்டாச்சியார், கோயில் பரம்பரை அர்ச்சகர் தவளம் மாதையன் ஆகியோர் மகா கும்பாபிஷேக விழாவை நடத்தினர். அதைத் தொடர்ந்து அபிஷேக அலங்காரம் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.