அம்மாபேட்டை: வரும், 5ம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, சேலம், ராஜகணபதி கோவிலில், 5 முதல், 16ம் தேதி வரை, தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. அதையொட்டி, நேற்று காலை, 5.30 மணிக்கு ராஜகணபதிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து, முகூர்த்தக்கால் நடப்பட்டது.