பதிவு செய்த நாள்
02
செப்
2016
11:09
திருத்தணி: மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது.திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில் உள்ள, மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, ஆவணி மாத அமாவாசையையொட்டி, காலை, 6:00 மணிக்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை, 10:30 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில், சிறப்பு பூஜைகள் மற்றும் ஊஞ்சல் சேவை நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.