வேடசந்துார், வேடசந்துார் தாலுகாவில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகளுடன் விழா நடத்துவர். இதை முன்னிட்டு, எத்தனை சிலைகளை எங்கெங்கு வைப்பது மற்றும் பாதுகாப்பு விபரங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. தாலுகா அலுவலகத்தில் ஒவ்வொரு அமைப்புகளுடனும் தனித்தனியாக பேச்சு வார்த்தை நடந்தது. தாசில்தார் தசாவதாரன், டி.எஸ்.பி., மோகன்குமார், போலீஸ் பாக்யராஜ் பங்கேற்றனர். வேடசந்துாரில் அமைதியாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது.