மதுரை, : மதுரை சிம்மக்கல் ஆதிசொக்கநாதர், செல்லத்தம்மன், ஆஞ்சநேயர் கோயில்களில் நாளை (செப்.,4) காலை 7:00 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயில்களான இக்கோயில்களின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜைகள் துவங்கின. நாளை காலை வரை இப்பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.