பதிவு செய்த நாள்
06
செப்
2016
05:09
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஏரிக்கரை மூலையில் உள்ள இரட்டை விநாயகர், என்.ஜி.ஜி.ஓ., நகர் தி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. திருக்கோவிலுார் ஏரிக்கரை மூலையில் உள்ள ஜெயகணபதி, விஜயகணபதி இணைந்த இரட்டை விநாயகர் கோவிலில் நேற்று காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், மகா அபிஷேகம், 108 சங்காபிஷேகம், வெள்ளி கவசத்தில் சிறப்பு அலங்காரத்துடன் சோடசோபச்சார தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சோழி அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இரவு 9:00 மணிக்கு மூஷிக வாகனத்தில் புஷ்ப அலங்காரத்தில் விநாயகர் வீதியுலா நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப் பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., சிவராஜ், கோவில் நிர்வாகி குமரகுரு, செயலாளர் ராஜா விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர். என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள சக்தி விநாயகர்க்கு காலை 9:00 மணிக்கு மகா அபிஷேகம், வெள்ளி கவசத்தில் அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சோடசோபசார தீபாராதனை, இரவு 7:00 மணிக்கு முத்து விமானத்தில் விநாயகர் வீதியுலா நடந்தது. தொழில் அதிபர்கள் சக்தி, தியாகராஜன், செல்வராஜ்‚ சாந்திபால் மற்றும் பக்தர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.