சாதனை: குருவாயூர் கோவிலில் ஒரேநாளில் 264 ஜோடிகளுக்கு திருமணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2016 11:09
திருவனந்தபுரம்: கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில். கடந்த 4-ம் தேதி முகூர்த்த நாளில் 264 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. ஒரே நாளில் இவ்வளவு ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதே போன்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஒரே நாளில் 226 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது தான் சாதனையாக கருதப்பட்டது. இந்நிலையில் கடந்த 5-ம் தேதி நடந்த 264 திருமணம் தான் புதிய சாதனை என கூறப்படுகிறது. முன்னதாக குரூவாயூர் கோயிலைச்சுற்றியுள்ள திருமண மண்டபங்கள் களைகட்டியிருந்தன. எனவே திருமண நிகழ்ச்சிகளால் கோயில் வளாகம் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.இதேபோல குழந்தைகளுக்கு முதல் முறையாக 965 குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சியும் அதிகளவில் நடைபெற்றது.