Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » வால்மீகி
வால்மீகி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 செப்
2011
12:09

அந்த ஏழை பெற்றோருக்கு தங்கள் குழந்தை பசியால் துடிப்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. குழந்தையின் அழுகை அவர்களின் நெஞ்சை பிழிந்தது. இறைவன் தங்களுக்கு ஏன் இந்த குழந்தையை கொடுத்தான் என்று வெம்பி வதங்கினர். அந்த குழந்தை மிகப்பெரிய வரலாறை எதிர்காலத்தில் படைக்கப்போகிறான் என்பதை அப்போது அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. பெரும் கஷ்டத்தினிடையே குழந்தையின் தந்தை அவனை வளர்த்தார். வீட்டில் ஏழ்மை இருந்தாலும் குழந்தைக்கு வைத்த பெயரில் மட்டும் செல்வம் கொழித்தது. குழந்தைக்கு ரத்னாகரன் என்று பெயர் சூட்டியிருந்தனர். வறுமை ஒருபுறம் வாட்டி வதக்கினாலும் ரத்னாகரன் தெய்வத்தின் அருளால் பலம் மிக்கவனாகவே வளர்ந்தான். பாலூட்டி சீராட்டி வளர்த்தாலும் என் குழந்தை பலசாலியாக இல்லையே, என்று வருத்தப்படும் பெற்றோர்கள் மத்தியில் வெறும் பழைய கஞ்சியை மட்டுமே குடித்து வளர்ந்த ரத்னாகரன் பலசாலியாக இருந்ததில் அவனது பெற்றோருக்கு ஓரளவு திருப்தியாக இருந்தது. வளர்ந்து வாலிபனானான் ரத்னாகரன். ரத்னாகரனின் தந்தைக்கு முதுமையின் காரணமாக அறவே வேலை செய்ய இயலாமல் போனது. சாப்பாட்டிற்கே வழியில்லாத ரத்னாகரனை குருகுலத்திற்கு செல்லவே இல்லை. கல்வி அறிவு இல்லாததால் ரத்னாகரனின் சேர்க்கையும் செயல்பாடுகளும் நாளுக்குநாள் மோசமானது. அவன் படிக்காத முட்டாள்களுடன் சேர்ந்து மிகவும் கெட்டுப்போனான். அதே நேரம் குடும்பத்தின் வறுமையும் அவன் இதயத்தில் நிழலாடியது. தன்னை சிரமப்பட்டு வளர்த்த பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவன் மனதிற்குள் உறுதியாக இருந்தது. ஒருநாள் வீட்டில் சாப்பிடுவதற்கு எதுவுமே இல்லாத சூழ்நிலையில் மயக்கநிலையில் இருந்த பெற்றோரைக் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானான் ரத்னாகரன். அவர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் மட்டும் கொடுத்து, சிறிது நேரம் பொறுத்திருங்கள். இன்று முதல் நானே ஏதாவது வேலை செய்து உணவு வாங்கி வருகிறேன் என சொல்லிவிட்டு வெளியே போனான். பெரும் மழை பிடித்துக்கொண்டது. அடித்த சூறாவளி அந்தப்பகுதியையே சின்னாபின்னமாக்கியது.

அப்படியே அசந்துபோய் கொட்டும் மழையில் ஒரு பாறையின் மீது அமர்ந்து விட்டான். அந்த வழியாக ஒரு வீரன் தனது குதிரையில் ஏறி வந்தான். மழையில் அமர்ந்திருந்த வாலிபனை உற்று நோக்கினான். தம்பி! எதற்காக கொட்டும் மழையில் இப்படி நனைந்து கொண்டிருக்கிறாய்? உன்னைப் பார்த்தால் மிகவும் களைப்படைந்து இருப்பதுபோல் தெரிகிறது. உனக்கு ஏதாவது வேண்டுமா? கேள் என்றான். தெய்வமாகப் பார்த்து தான், இந்த வீரனை அனுப்பியிருக்கிறது எனக்கருதிய ரத்னாகரன், தன் கதையை அவனிடம் கூறினான். குதிரையில் வந்தவன் ஒரு பெரும் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் என்பது ரத்னாகரனுக்கு புரியவில்லை. அவன் கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு பெற்றோருக்கு ஏதாவது வாங்கிச்செல்லவேண்டும் என நினைத்து புறப்பட்டான். உடனே குதிரைவீரன் ஒரு நிபந்தனை விதித்தான். உன் பெற்றோருக்கு ஏதாவது வாங்கி கொடுத்துவிட்டு உடனே நீ திரும்பிவிட வேண்டும். மீதி பணத்தை அவர்கள் கையில் கொடுத்துவிட்டு வா. உனக்கு பெரும் செல்வம் கொட்டும் அளவிற்கு ஒருவேலையை நான் தருகிறேன். அதை நீ தொடர்ந்து செய்தால் இந்த உலகிலேயே பெரும் செல்வந்தனாகி விடுவாய் என்றான். ரத்னாகரனுக்கு மேலும் மகிழ்ச்சி பொங்கியது. பசிக்குப் பணம் கிடைத்ததுடன், படிக்காத தனக்கு பெரிய வேலையும் கிடைக்கப்போகிறது என்பதை நினைத்து ஆனந்தம் கொண்டான். பெற்றோரை சந்தித்து நடந்த விஷயத்தை கூறினான். அவர்கள் மகனுக்கு வேலை கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ரத்னாகரன் குதிரை வீரனை மீண்டும் சந்தித்தான். அவன் தான் தங்கியிருந்த குகைக்கு ரத்னாகரனை கூட்டிச்சென்றான். அங்கு சென்றபிறகுதான் அவன் பெரும் கொள்ளைக் கும்பலுடன் அங்கு வசித்தது தெரியவந்தது. படிப்பறிவில்லாத ரத்னாகரனின் மனதை குதிரைவீரன் எளிதாக மாற்றிவிட்டான்.  கொள்ளையடிப்பது, பணம் தர மறுப்பவர்களை கொலைசெய்வது... இதில் எதை வேண்டுமானாலும் செய். தினமும் பெரும் செல்வத்துடன் இங்கு வா. அதில் பாதி பங்கை எடுத்துக்கொள். மீதியை என்னிடம் கொடுத்துவிடு, என்றான். அதற்குரிய பயிற்சிகளை எடுத்துக் கொண்டான் ரத்னாகரன். உலகில் நல்லதை படிப்பது தான் சிரமம். கெட்டதை பார்த்த மாத்திரத்திலேயே படித்து விடலாம். ரத்னாகரனின் வாழ்க்கை இதற்கு உதாரணமாக அமைந்தது. ரத்னாகரன் கொள்ளையில் ஈடுபட்டான். பணம் தர மறுத்தவர்களை கொன்று குவித்தான். பணம் சேர்ந்ததும், திருமணமும் செய்துகொண்டான். அவனுக்கு ஒரு மகனும் பிறந்தான். ஒருமுறை நாரத முனிவர் ஒரு காட்டின் வழியாக வந்துகொண்டிருந்தார். அவரை வழிமறித்தான் ரத்னாகரன். அவரிடமிருந்த பொருட்களை கேட்டான். உடனே நாரத முனிவர், நீ யாருக்காக இவற்றை கொள்ளையடிக்கிறாய்? என்றார்.

என் பெற்றோர், மனைவி, மக்களைக் காப்பாற்ற என்றான் ரத்னாகரன். சரி, உன் வருமானத்திலிருந்து கிடைக்கும் லாபத்தை ஏற்றுக் கொள்ளும் உன் குடும்பத்தார், நீ செய்யும் கொலை, கொள்ளைகளுக்கான பாவத்தையும் ஏற்றுக் கொள்வதுதானே நியாயம்? என்றார். இதற்கு ரத்னாகரன் ஆம் என்றான். அப்படியானால் இதற்கு விடை தெரிந்து கொண்டு வா. நீ வரும் வரை நான் இங்கேயே நிற்கிறேன், என்றார். நாரதரை நம்பாமல், அவரை ஒரு மரத்தில் கட்டி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றான். ரத்னாகரன் என்ன தொழில் செய்கிறான் என்பது இதுவரை அவனுடைய வீட்டாருக்கு தெரியாது. மகன் ஏதோ தொழில் செய்து செல்வத்தை கொண்டுவந்து கொட்டுகிறான் என்றே பெற்றோர்கள் நினைத்தனர். மனைவியும் அவ்வாறே நினைத்துக் கொண்டாள். ரத்னாகரன் வீட்டிற்கு சென்றதும், என் வருமானத்தில் மகிழ்ச்சியை அனுபவிக்கும் நீங்கள், எனது பாவங்களையும் பங்கிட்டுக் கொள்வீர்களா? என குடும்பத்தாரிடம் கேட்டான். அவனது பெற்றோர், பெற்றவர்களை காப்பாற்றுவது மகனுடைய கடமை. அவன் செய்யும் தொழிலில் உள்ள பாவ, புண்ணியங்களுக்கு அவனே பொறுப்பாவான் என்றனர். அவனது மனைவியும், மகனும் இதே பதிலை கூறினர். மனைவி குழந்தைகளை காப்பாற்றுவது ஒரு ஆண்மகனின் கடமை. அவன் என்ன தொழில் செய்கிறான் என்பதோ, அதில் உள்ள பாவங்கள் பற்றியோ தங்களுக்கு கவலை இல்லை என்றனர். ரத்னாகரனுக்கு அறிவில் தெளிவு ஏற்பட்டது. தன்னால் வரும் வருமானத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளும் குடும்பத்தினர், தனக்கு கஷ்டம் வருமானால் அதிலிருந்து ஒதுங்கிப் போய்விடுவோம் என்று சொன்னதை நினைத்து மனம் வருந்தினான். நாரதரிடம் சென்று மன்னிப்பு கேட்டான். தன் கண்ணைத் திறந்த நாரரதருக்கு நன்றி சொன்னான். நாரதர் மகிழ்ந்து, நீ செய்த பாவங்கள் நீங்க வேண்டுமானால் ராம நாமத்தை உச்சரி, என சொல்லி விட்டு சென்றார். ரத்னாகரனுக்கு படிப்பறிவு இல்லாததால், அவன் ராம என்ற சொல்லை, மரா..மரா.. என்றே சொன்னான். அதை வேகமாக சொல்லும் போது, தானாகவே, ராம ராம என மாறியது. அதை சொல்லிக் கொண்டே ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்து விட்டான். அவனை யாராலும் எழுப்ப முடியாத நிலைக்கு போய் விட்டான். பல ஆண்டுகள் கடந்தன. அவன் உடலைச் சுற்றி வால்மீகம் வளர ஆரம்பித்தது. வால்மீகம் என்றால் புற்று என பொருள்படும். ஒரு காலகட்டத்தில் இறைவன் அவனுக்கு அருள்பாலித்தார். அவன் புற்றிலிருந்து வெளிப்பட்டதால் வால்மீகி என அழைக்கப்பட்டான். அன்று முதல் வால்மீகி முனிவர் என அனைவரும் அழைக்க ஆரம்பித்தனர். இந்த மாபெரும் கொள்ளைக்காரனே பிற்காலத்தில் ராமாயணம் என்னும் மகாகாவியத்தை படைத்தான். இன்றும் இறவாப் புகழுடன் வாழ்கிறான்.

வால்மீகி அல்லது வால்மீகி முனிவர் என்பவர் இந்தியாவின் பழம்பெரும் இரண்டு இதிகாசங்களில் ஒன்றான, இராமாயணம் எனும் இதிகாசத்தை இயற்றியவர் ஆவார். இவர் ஒரு வடயிந்தியர் ஆவார். .இவர் இராமாயணத்தை வட மொழியில் எழுதினார். இவர் இயற்றிய இராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி, உலகில் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவர் இயற்றிய இராமாயணம் கதையும், அதன பாத்திரங்களை உண்மையென மக்கள் நம்பும் அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அதேவேளை இராமாயணம் நூல் இதிகாசமே என்றாலும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புவியியல் அமைவுகள், விவரிக்கப்பட்டிருக்கும் ஆட்சி முறைமைகள், அரசுகள் போன்றவற்றை ஆய்வுநோக்கில் பார்க்கும் போது, வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தைப் படைக்க முடியாது என வாதிடுவோரும் உள்ளனர். இது கி.மு 4ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டுள்ளதால், அந்தகாலத் தன்மைகளுக்கு அமைவாக, மந்திரம், மாயை உடன் இதிகாசச் சாயலுடன் எழுதப்பட்ட ஒரு வரலாறாகவும் இருக்கலாம் என கருதுவோரும் உளர். மேலும் இராமாயணம் இதிகாச நூலை இயற்றியவரான வால்மீகி ஒரு வடயிந்திய ஆரிய மரபினர் என்பதால், ஆரிய மரபினரை உயர்த்தி, இராமனை கடவுளாகவும்; திராவிட மரபினரை தாழ்த்தி, இராவணனை அசுரனாகவும் சித்திரித்துள்ளார் எனும் குற்றச்சாட்டுக்களும் உள்ளன. அதே இதிகாசத்தில் இராமனுக்கு துணைப்புரியும், தென்னிந்தியர்களை குரங்குகளாக (வானரர்) சித்தரிக்கப்பட்டிருப்பதன் தவறையும் பலர் சுட்டிக்காட்டுக்கின்றனர்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar