சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த ராயப்பனுார் முத்துமாரியம்மன் கோவில் தேர்திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 28ம் தேதி காப்பு கட்டுதல் நடந்தது. நேற்று முன்தினம் காலை பால்குட ஊர்வலம், அக்னி சட்டி, அலகு குத்துதல், தீ மிதித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. மாலையில், கிராம மக்கள் தேர்வடம் பிடித்து, தேரோடும் வீதி வழியாக இழுத்துச் சென்றனர்.