பதிவு செய்த நாள்
12
செப்
2016
12:09
கூடலுார் : கூடலுாரில், விநாயகர் விசர்ஜன ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. கூடலுாரில், இந்து முன்னணி சார்பில், ராஜகோபாலபுரம் ஓம் சக்தி கோவிலில் இருந்து, விநாயகர் விசர்ஜன ஊர்வலம் துவங்கியது. இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் ராஜேஷ் துவக்கி வைத்தார்.ஊர்வலத்துக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமை வகித்தார். ஊர்வலம் ஊட்டி மைசூர் சாலை வழியாக, தொரப்பள்ளி குணிலில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட,41 சிலைகள் அங்குள்ள ஆற்றில், கரைக்கப்பட்டன. நிர்வாகிகள் ராஜா, சுனில்குமார், பிரஜோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.எச்.பி., சார்பில், கூடலுார் நகராட்சி அலுவலகத்திலிருந்து துவங்கிய ஊர்வலத்தை வக்கீல்கள் குமரேசன், பரசுராமன், கருணாநிதி ஆகியோர் துவக்கி வைத்தனர். விழா குழு தலைவர் சின்னதம்பி, செயலாளர் ஆனந்தசயனன், பொருளாளர் பாஸ்கரன், துணை தலைவர்கள் கிருஷ்ணன், மனோஜ், ராதாகிருஷ்ணன், துணை செயலாளர்கள் சங்கரன், சசி முன்னிலை வகித்தனர். ஊர்வலம், ஊட்டி மைசூர் சாலை, பழைய கோர்ட் சாலை வழியாக இரும்புபாலத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட,78 சிலைகள் பாண்டியார் பொன்னம்புழா ஆற்றில் கரைக்கப்பட்டன. மசினகுடி விநாயகர் கோவிலில் துவங்கிய ஊர்வலம், மசினகுடி நகர் மற்றும் மாயார் சாலை வழியாக சென்று, மரவகண்டி அணையில் கரைக்கப்பட்டது.
* நடுவட்டத்தில் வி.எச்.பி., சார்பில் நடந்த விசர்ஜன ஊர்வலத்தில், ௯ சிலைகள் கொண்டு செல்லப்பட்டன. வழி நெடுகிளும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. நடுவட்டம் பஜார் வரை சென்ற ஊர்வலம் நிறைவடைந்தது. டி.ஆர்.பஜார் அணையில் சிலைகள் கரைக்கப்பட்டன. இதில், நிர்வாகிகள் ரவி, ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
*பந்தலுார் தாலுகாவில் நடந்த விசர்ஜன ஊர்வலத்தில் பங்கேற்ற சிலைகள் அனைத்தும், ரிச்மவுண்ட் மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து, 64 சிலைகள், பொன்னானி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.