நாவலுார்: நாவலுார் கிராமத்தில், பராமரிப்பின்றி சிதலமடைந்து காணப்படும் ஏகாம்பரநாதேஸ்வரர் கோவிலை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர் பார்க்கின்றனர். செரப்பணஞ்சேரி ஊராட்சி, நாவலுார் கிராமத்தில் பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பர நாதே ஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. மக்களின் பயன்பாட்டு தலங்களில் முக்கியமான கோவில்களில் ஒன்றான இது, பல ஆண்டுகளாக புதர் மண்டி பராமரிப்பு இல்லாமல் காணப்பட்டது. இதனால், பக்தர்களின் வருகையும் நாளுக்கு நாள்குறைந்தது. மேலும் கோவிலுக்கு சொந்தமான நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. இந்த கோவிலை சீரமைத்து, தொடர் பூஜை செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.