திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், நாளை, வாமனர் சிறப்பு வழிபாடு நடக்கிறது. மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க பகவான் சிறிய உருவில் வாமனராக அவதரித்து, பின்னர் உலகளந்த பெருமாளாக விஸ்வரூபம் எடுத்தார். இவை இரண்டு அவதாரங்களையும் ஒருங்கே அமைந்த திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் சன்னதிக்கு பின்புறத்தில் வாமனர் தனி சன்னதி உள்ளது. சிறப்பு பெற்ற இத்தலத்தில், ஆவணி திருவோணத்தை முன்னிட்டு நாளை (13ம் தேதி) காலை வாமனருக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமி தலைமையில், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.