கழிவுநீர் கலப்பதால் நிறம் மாறிய கொப்புடையம்மன் தெப்பக்குளம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2016 11:09
காரைக்குடி: காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட கொப்புடையம்மன் கோயில் தெப்பகுளத்தில் கழிவுநீர் கலப்பதால் நிறம்மாறி உள்ளது. காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் அருகே நகராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது. நான்கு திசைகளிலும் படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் வர பிரதான வழிகளும் உள்ளன. பல ஆண்டுகளாக துார்வாரப்படவில்லை. குளத்தை சுற்றிலும் அசுத்தமாக உள்ளது. பர்மாபஜார் அக்னிபாலா கூறியதாவது: இங்கு கொப்புடையம்மன் கோயில் தெப்ப திருவிழா நடக்கிறது. அவற்றை சுற்றிலும் சிலர் அசுத்தப்படுத்துகின்றனர். இதனால் கரையில் செல்ல முடியாமல் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தெப்பத்தில் கழிவு நீரும் கலக்கிறது. இதனால் தண்ணீர் பச்சை நிறத்தில் உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளும் தேங்கி கிடக்கிறது. படித்துறைகளும் பாசி படர்ந்துள்ளதால் குளித்தவர் வழுக்கி விழுந்து இறந்தார். தெப்பத்தை துார்வாரி, வேலி அமைத்து பூட்டு போட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.