பதிவு செய்த நாள்
13
செப்
2016
12:09
கோவை : கோயமுத்துார் வடக்கு சர்வோதய சங்கம் சார்பில், கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை, என்.எச்., ரோட்டில் உள்ள, கதர்பவனில் நேற்று துவங்கியது. கண்காட்சியை, கவிஞர். கவிதாசன் திறந்து வைத்தார். நவராத்திரியில், கொலு பொம்மைகள் வைத்து வழிபடுவது வழக்கம். இதை முன்னிட்டு, இறைவனின் திருவுருவ சிலைகள், புராண கதைகள், வாழ்வியல் நிகழ்வுகளை உணர்த்தும், பொம்மை செட்டுகள் கொண்ட, கொலு பொம்மை கண்காட்சி, கதர்பவனில் நேற்று துவங்கியது. இதில், களிமண், காகித கூழ், மார்பிள், பைபர் ஆகியவற்றால் செய்யப்பட்ட, கொலு பொம்மைகள், அஷ்டலட்சுமி பொம்மைகள், தசாவதாரம், மகாபாரதம், ராமாயண காட்சிகள் அடங்கிய செட், உள்ளிட்ட எக்கச்சக்க கலெக்ஷன்கள் உள்ளன. கோயமுத்துார் வடக்கு திவ்யோதய சங்க செயலாளர் ஐராசன் கூறுகையில்,கிருஷ்ணர் வெண்ணெய் திருடிய நிகழ்வு, நின்ற கோலத்தில் திருமணம், குட்டீஸ்களை கவரும் சோட்டாபீம், குரு பார்வை கொண்ட தட்சணாமூர்த்தி ஆகிய பொம்மைகள், புதுவரவாக இடம்பெற்றுள்ளன. பைபர் கொண்டு செய்யப்பட்ட பொம்மைகளில், நுாறு ஆண்டுகள் வரை, வண்ண சிதைவு ஏற்படாது; தண்ணீரிலும் நனைக்கலாம். கண்காட்சி, வரும் தீபாவளி வரை, அனைத்து நாட்களும் நடப்பதால், வாடிக்கையாளர்கள் வாங்கி பயனடையலாம், என்றார்.