திருப்புத்துார்: திருப்புத்துார் குளம்கரை கூத்த அய்யனார் கோவிலில் நேற்று வருடாபிஷேகம் நடந்தது. திருப்புத்துார், தம்பிபட்டி,புதுப்பட்டி கிராமங்களுக்கு பாத்தியப்பட்டது குளம்கரை கூத்த அய்யனார் கோவில். திருப்புத்துார் பெரியகண்மாயில் அமைந்துள்ளது. கடந்தாண்டு இக்கோயில் புனரமைக்கப்பட்டு இரண்டு சேமக்குதிரைகள்,பரிவார தெய்வங்களுக்கு தனி விமான சன்னதிகளுடன் திருப்பணி நடந்து கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. 7 மணி அளவில் பூர்ணாகுதி நடந்து தொடர்ந்து மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் வருடாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சந்தனக்காப்பில் அய்யனார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் நடந்தது.