ஈரோடு: மகிமாலீஸ்வரர் கோவில், ஐந்தாவது ஆண்டு கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. ஈரோடு, திருவேங்கிடசாமி வீதியில், மகிமாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், 2011ல் நடந்தது. ஐந்தாமாண்டு விழா நேற்று நடந்து. இதையொட்டி காலையில், விநாயகர் பூஜை, சுவாமி, அம்பாளுக்கு, திரவிய அபிஷேகம், கலசாபிஷேகம், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலையில் திருவீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.