நெல்லிக்குப்பம் ஐய்யனாரப்பன் கோவிலில் சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2016 04:09
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஐய்யனாரப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி ஐய்யனாரப்பன் கோவிலில் 72 ஆம் ஆண்டு திருவிழா நடந்தது.11 ஆம் தேதி கொடிகட்டுதல் நடந்தது.12 ஆம் தேதி சிறப்பு அபிஷேகமும் கரகம் குதிரை ஊர்வலமும் ஊரணி பொங்கலும் நடந்தது.பூரணி பொற்கலை சமேதராய் ஐய்யனாரப்பன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பூஜைகளை முருகன் பூசாரி செய்தார்.