நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. நெல்லிக்குப்பத்தில் நேற்று முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் கொண்டாடப்பட்டது.ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து சின்னதெரு பள்ளிவாசலில் கூடினர்.அங்கிருந்து நகரின் முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக சென்று கொத்வாபள்ளியில் உள்ள பள்ளிவாசலை அடைந்தனர்.அங்கு நடந்த சிறப்பு தொழுயில் கலந்து கொண்டனர். பிறகு ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.முன்பாக ஏழைகளுக்கு குர்பானி என்னும் பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வழங்கினர்.