பதிவு செய்த நாள்
14
செப்
2016
12:09
பவானி: பவானி, செல்லியாண்டியம்மன் கோவிலில், 108 வலம்புரி சங்குபூஜை, 108 மங்கள திரவிய ஹோமம் நேற்று நடந்தது. கடந்த, 2007 ம் ஆண்டு, செப்.,13ம் தேதி, கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆண்டு தோறும் இந்நாளில், வருடாபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்த வகையில், பத்தாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. காலையில் சங்கல்பம், பூர்வாங்க பூஜைகளை தொடர்ந்து, 108 வலம்புரி சங்குபூஜை, 108 மங்கள திரவிய ஹோமம், மஹாபூர்ணாஹுதி நடந்தது. இதையடுத்து மூலவர் செல்லியாண்டியம்மனுக்கு, 108 வலம்புரி சங்காபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது.