பதிவு செய்த நாள்
16
செப்
2016
11:09
செட்டிப்புண்ணியம்:செட்டிப்புண்ணியம் கிராமத்தில், ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி நடைபெற்றது.
செங்கல்பட்டு அடுத்த, செட்டிப்புண்ணியம் கிராமத்தில், தேவாத பெருமாள் கோவிலில் மூலவர் சன்னதியில், ஸ்ரீ யோக ஹயக்ரீவர் பெருமாள் வீற்றுள்ளார்.
இக்கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி விழா நடைபெறும். இந்த ஆண்டு, ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி விழா நடைபெற்றது. காலை, 5:00 மணிக்கு, விஸ்வரூப தரிசனமும், காலை, 6:30 மணிக்கு திருவாராதனமும் நடந்தது. காலையிலிருந்து மாலை வரை சுவாமியை, பொதுமக்கள் தரிசனம் செய்தனர். அதன் பின், சிறப்பு திருமஞ்சனமும், திருவாராதனம் நடைபெற்றது. சென்னை உட்பட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.