பதிவு செய்த நாள்
16
செப்
2016
12:09
ருத்ராட்ச மணியை கழுத்தில் அணிந்தால், உடலும் மனமும் துாய்மையாக இருக்கும் என்றனர் நம் முன்னோர். ஆனால் இன்று, ருத்ராட்சை அணிந்தவர்களை சாமியார்களாக பார்ப்பவர்களே அதிகம். பழம்பெருமை வாய்ந்த இத்தகைய, ருத்ராட்சை குறித்த விழிப்புணர்வு கண்காட்சி செப்., 18ல் கோவையில் துவங்குகிறது.
அவிநாசி ரோடு ரெசிடென்ஸி ஓட்டலில் துவங்கும் இக்கண்காட்சியை நேபாள ருத்ராட்ச அமைப்பு ஏற்படுத்தியுள்ளது. ஏகமுகி, நாக ருத்ராட்சம், ஜெபமாலை, இந்திரன் மாலா, பிரித்வி மாலா, சக்தி, காந்தா மாலா, குபேரன் மாலா போன்ற பல்வேறு அரிய வகை ருத்ராட்சங்கள், கண்காட்சியில், விற்பனைக்காக வைக்கப்படவுள்ளன.
போலி ருத்ராட்சங்களை கண்டறியும் முறை குறித்த விளக்கங்களை, ருத்ராட்ச துறையில் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற, நிபுணர் பாண்டுரங்கா வழங்குகிறார். மேலும் ருத்ராட்சம் பற்றிய பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது, ருத்ராட்ச மனித உறவுகள் நுால் பெரும்பாலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இவரது, "ருத்ராட்சதெய்விக சக்தி நுாலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.