சிவராஜ் அன்னை வேளாங்கண்ணி கொடியேற்றத்துடன் விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2016 12:09
கே.ஜி.எப்: உரிகம் சிவராஜ் நகரில் அன்னை வேளாங்கண்ணி சிற்றாலய 19ம் ஆண்டு விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. அன்னை வேளாங்கண்ணி சிற்றாலய 19ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று மாலை ஜெபமாலை நிகழ்ச்சி நடந்தது. காணிக்கராஜ், லுார்துசாமி குழுவினர் பிரார்த்தனை ஜெபங்களை நடத்தினர். திருமுகம் தலைமை வகித்தார். ஞானசம்பத் வரவேற்றார். டி.பிரபு மெழுகு வத்தி ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மாதாவின் புனித கொடியை கோப்பன் ராஜ், ராஜூ, பி.சங்கர் ஆகியோர் ஏற்றி வைத்தனர். இன்று மாலை பிரார்த்தனை, ஜெபமாலை நிகழ்ச்சிகள் காலை முதல் மாலை வரை நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. வரும், 19ல் அலங்கரிக்கப்பட்ட மாதா தேர்பவனியை, ரூபா சசிதர் துவக்கி வைக்கிறார். வாணவேடிக்கை முழங்கிட நகர்வலம் வருகிறது. நகராட்சி தலைவர் ரமேஷ்குமார் ஜெயின், முன்னாள் தலைவர் கே.சி.முரளி, நகர வளர்ச்சி குழும தலைவர் டி.ஜெயப்பால் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர். விழா ஏற்பாடுகளை அன்பழகன் தலைமையில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.