நம்பினார் கெடுவதில்லை, நான்குமறை தீர்ப்பு என்பது பற்றி ..
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2016 02:09
இந்து மதத்தின் அடிப்படையே நம்பிக்கை தானே. வேதங்களும், ஆகமங்களும் பூஜை பற்றியும், ஸ்தோத்திரங்கள் பற்றியும் சொல்லும்போது கடைசியில் பலஸ்ருதி என்று ஒரு ஸ்லோகத்தின் வாயிலாகச் சொல்லும். அதில் இந்த பூஜையை நம்பிக்கையுடன் செய்பவர்கள் அல்லது இந்த ஸ்தோத்திரத்தை நம்பிக்கையுடன் சொல்பவர்கள் இன்னின்ன பலன்களை அடைவார்கள்; இது சத்தியம் என்று கூறுகிறது. எனவே இங்கு நம்பிக்கை என்பது இறைவனிடம் உள்ளது போலவே நாம் செய்யும் வழிபாடுகளிலும் இருக்க வேண்டும். இதனை உபநிடதங்கள் ஸ்ரத்தயாதேயம் என்று சொல்கின்றன. இதற்கு சிரத்தையுடனும், நம்பிக்கையுடனும் செய்யும் பூஜை என பொருள். இப்படி நம்பிக்கையுடன் வழிபட்டால், அவர்களது விருப்பங்கள் தாமே அவர்களை வந்தடையும். ஒன்றியிருந்து நினைமின்காள் உந்தமக்கு ஊனமில்லை என்று நாவுக்கரசரும் நான்குமறை தீர்ப்பினை வலியுறுத்துகிறார்.