பதிவு செய்த நாள்
12
செப்
2016
05:09
27 நட்சத்திரங்கள் வரிசையில் 22வதாக இருப்பது திருவோண நட்சத்திரம். இதன் அதிபதி சந்திரன். மகர ராசிக்குரிய நட்சத்திரம். இந்த நாளில் பெண் பார்த்தல், தாலிக்கு பொன் உருக்குதல், திருமணம், சீமந்தம், குழந்தைக்கு பெயரிடுதல், முடிக்காணிக்கை கொடுத்தல், காது குத்துதல், ஆடை, ஆபரணம் அணிதல் போன்ற சுபநிகழ்ச்சிகளைச் செய்யலாம். வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்குதல், மாடு, ஆடு வாங்குதல், குளம், கிணறு வெட்டுதல், வாசல்நிலை நாட்டுதல், நவக்கிரக சாந்தி செய்தல், புதுமனை புகுதல், விதை விதைத்தல், விருந்துண்ணல், புனித யாத்திரை செல்லுதல், உபநயனம் செய்தல், கல்வி, நாட்டியம் கற்க தொடங்குதல் போன்றவற்றையும் செய்யலாம்.