Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தும்மலா இப்படி சொல்லுங்க! எத்தனை படி அமைக்கப் போகிறீர்கள்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கொலு வைக்க ரெடியா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2016
04:09

வெறும் கண்காட்சி அல்ல! இது தான் வாழ்க்கை! கொலு என்றால் ஏதோ பொம்மைக் கண்காட்சி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். நிஜத்தில் வாழ்க்கைத் தத்துவமே இதில் புதைந்து கிடக்கிறது. கொலு மேடையில் இன்னின்ன பொம்மைகள் இருக்க வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. இந்த ஆண்டு கொலு முதல், இந்த ரக பொம்மைகளைச் சேர்க்க முயற்சி செய்யுங்கள். முதல் படியில் புல், செடி, கொடி ஆகிய தாவர பொம்மைகளை வைக்க வேண்டும். இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை இது குறிக்கிறது. இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம் பயக்கும். நத்தை போல மெதுவாக நிதானமாக சென்று உயர் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று உறுதி கொள்வதே இதன் பொருள். மூன்றாம் படியில் எறும்பு, கரையான் புற்று பொம்மைகளை வைக்க வேண்டும்.

எறும்பைப் போல சுறுசுறுப்பு, எத்தனை முறை தகர்த்தாலும் கரையான் திரும்பத் திரும்ப புற்றைக் கட்டுவது போன்ற திட மனப்பான்மை வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும். நான்காம் படியில் நண்டு, வண்டு பொம்மைகள் நான்காவது படியில் இடம்பெற வேண்டும். இவற்றின் குணம் ஆழமாக ஊடுருவி பார்ப்பது. எந்த விஷயத்தையும் ஆழமாக சிந்தித்து செயலாற்றுவதை இந்த பொம்மைகள் குறிக்கும். ஐந்தாம் படியில் மிருகம், பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட வேண்டும். பறவை போல் கூடி வாழ வேண்டும் என்பதே இதன் பொருள். ஆறாம்படியில் மனித பொம்மை வைக்கவேண்டும். வாழ்க்கையில் மேற்கண்ட ஐந்து படிகளில் உள்ளது போன்ற குணங்களை கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.

ஏழாம்படியில் முனிவர்கள், மகான்கள் பொம்மை வைக்க வேண்டும். மனிதன் உரிய பக்தி மார்க்கத்தை கடைபிடித்தால் மகான்கள் ஆகலாம் என்பதே இதன் பொருள். எட்டாம்படியில் தேவர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகான் நிலையை அடையும் மனிதன் தேவர் நிலைக்கு உயர்வதை இது காட்டுகிறது. ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி சிலையை நடுவில் பெரிய அளவில் வைக்க வேண்டும். உயிர்கள் தங்கள் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, தெய்வமாக வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே கொலு உருவானது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

விளையாட்டு அக்டோபர் 19,2026

மிருகக்காட்சி சாலைக்கு குடும்பத்துடன் சென்றான் சிறுவன் நிஷார். அங்கே பூனை இருக்கும் பகுதிக்குள் ... மேலும்
 
* மற்ற நாளை விட வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது சிறந்தது.  * வேண்டியவர், வேண்டாதவர் என பாகுபாடு இன்றி ... மேலும்
 

சிரிக்காதீர் அக்டோபர் 19,2026

பிறரது துன்பத்தை பார்த்து சிரிப்பது சிலரின் இயல்பு. ஆனால் இறை நம்பிக்கையாளர்கள் இதை விரும்ப ... மேலும்
 

பரிசு அக்டோபர் 19,2026

* இறைவன் அளித்த பரிசே வறுமை. அதனால் கலங்காதீர். * பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணம் செய்வது பாவச்செயல்.   ... மேலும்
 

புனித நீரூற்று அக்டோபர் 19,2026

ஸபா, மர்வா என்னும் மலைகள் மெக்காவில்  உள்ளன. இதில் ஸபா மலைக்கு அருகில் தன் மனைவி, குழந்தை இஸ்மாயீலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar