திண்டிவனம் : ஓமந்துாரில், ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா நடந்தது. ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தியை முன்னிட்டு, திண்டிவனம் அடுத்த ஓமந்துாரில் உள்ள ஸ்ரீராம் பள்ளி வளாகத்தில், அகோபில மடத்தின் பீடாதிபதி ஸ்ரீரங்கநாத யதீந்திர மகா தேசிகர் தலைமையில், தினந்தோறும் வேத திவ்ய பிரபந்த பாராயணம் நடந்து வருகிறது. நேற்று காலை ௭:௦௦ மணிக்கு, விஸ்வரூப தரிசனம், ௮:௩௦ மணிக்கு, தீர்த்த சடாரி, ௧௧:௦௦ மணிக்கு, உச்சிக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை ௬:௩௦ மணியளவில் பானக ஆராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை, பள்ளியின் தாளாளர் முரளிரகுராமன் செய்துள்ளார்.