பதிவு செய்த நாள்
23
செப்
2016
01:09
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் ‘திருநாளைப் போவார்’ நாயனாருக்கு குருபூஜை விழா, நேற்று நடைபெற்றது. சிவனடியே சிந்திந்து இறைவனுடன் இரண்டற் கலந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு, நட்சத்திர படி குருபூஜை விழா நடந்து வருகிறது. அதன்படி, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோயிலில், 63 நாயன்மார்களில் ஒருவரான ‘திருநாளைப் போவார்’ நாயனார் அவதார நாளான, புரட்டாசி ரோகினி நட்சத்திரத்தில், குரு பூஜை விழா, நடைபெற்றது. நாயனார் திருமேனிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, அவரின் ஆன்மார்த்த மூர்த்தியான கூத்தபெருமானுக்கு, 108 அர்ச்சனை, மஹா தீபாராதனை நடந்தது. இதில், ஓதுவா மூர்த்திகள் மற்றும் அடியார்கள் பங்கேற்று போற்றி திருத்தாண்டகத்தை பாடினர். அர்த்த ஜாம பூஜை அடியார் திருக்கூட்ட அடியார்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.