பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை, ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இரண்டாம் சனிக்கிழமையையொட்டி, காலை 6:00 மணிக்கு, விஸ்வரூப தரிசனம், 8:00 மணிக்கு, நித்யபடி பூஜை, 9:30 மணிக்கு, உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.