புதுச்சேரி: புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு, பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், தலை வாழை இலை போட்டு, ஆயிரம் பேருக்கு இன்று (24ம் தேதி) அன்னதானம் வழங்கப்படுகிறது. புதுச்சேரி – திண்டிவனம் மெயின் ரோடு பஞ்சவடீயில், 36 அடி உயர, ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை தோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையான இன்று (23ம் தேதி) பகல் 12:00 மணி முதல் 2.00 மணி வரை, ஆயிரம் பேருக்கு தலை வாழை இலை போட்டு உணவு வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சாரிட்டபிள் டிரஸ்ட் செய்துள்ளது.