ராசிபுரம்: ராசிபுரத்தில், அனைத்து சிவனடியார்களின் கூட்டமைப்பின் சார்பில், தமிழ்நாடு அரசுப்பணிக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
இதன், முதலாம் ஆண்டு நிறைவு மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா வன்னியர் குல சமுதாய கூடத்தில் நடந்தது. முதலாம் ஆண்டு நிறைவு மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்கவிழாவில், அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராமநாதன்பிள்ளை கலந்து கொண்டார். தற்போது இந்து அறநிலையத்துறை தேர்வுக்கான பயிற்சி மட்டும் நடந்து வருகிறது, விரைவில், தமிழ்நாடு அரசின் அனைத்து தேர்வுக்குமான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். மேலும், இது மாநிலம் முழுவதும் விரிவு படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், ராசிபுரம் பொருமான் கோவில் அருகில் உள்ள வன்னியர் குல சமுதாய கூடத்தில் நடந்து வருகிறது. ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியை சேர்ந்தவர் கலந்து கொண்டு பயன்பெற, கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.