தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள கோம்பை என்னும் தலத்தில் திருமலைராயப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் அருகிலுள்ள மலையில் ஓரிடத்தில் மூன்று நாமங்கள் போல் கல்லின் மீது காணப்படுகிறது. ஒருசமயம் அந்தக் கற்களை ஒருவர் சேதப்படுத்த, அதிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்ததாக பழங்கதை ஒன்று கூறப்படுகிறது. அந்த ரத்தத்தின் கறையை இன்னும் காணலாம். இப்பகுதியை ராமக்கல் மெட்டு என அழைக்கின்றனர்.