பஞ்சபாண்டவர்கள் வனவாச காலத்தில் தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து 11 கி.மீ. தொலைவிலுள்ள சாலமலையில் வந்து தங்கியதாகக் கூறப்படுகிறது. இங்கு லட்சுமி நாச்சியார் சமேத சஞ்சீவி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சனிக்கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கும் இந்த கோயிலில் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் தொட்டில் கட்டி, தொடர்ந்து ஏழு சனிக்கிழமைகள் விளக்கேற்றி வழிபட்டால் மழலைச்செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.