திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோயிலில் ஓர் அகலை ஏற்றி பெருமாளிடம் வைக்கிறார்கள். அது எரிந்து முடியும் வரை காத்திருந்து, பின்னர் வீட்டிற்கு எடுத்துச் சென்று அதனுடன் காசும் துளசியும் சேர்த்த சிறு பெட்டியில் மூடி பூஜையறையில் வைக்கின்றனர். அதில் பெருமாளும் தாயாரும் உறைவதாக ஐதிகம். இந்த விளக்கு நேர்த்திக்கடனால் அவர்களுடைய நியாயமான கோரிக்கைகள் நிறைவேறுகின்றன.